நெல்லை: தாழையூத்து பகுதிகளில் தேவையில்லாமல் வெளியில் சுற்றுபவர்களை ட்ரோன் கேமரா மூலம் போலீஸார் கண்காணித்தனர். தாழையூத்து காவல் ஆய்வாளர் பத்மநாதன் தலைமையிலான போலீசார் ட்ரோன் கேமரா மூலம் கண்காணித்து,அதிக அளவில் மக்கள் கூடிய இடங்களுக்கு சென்று,கொரோனா குறித்த விழிப்புணர்வுகளை ஏற்படுத்தி,மேலும் தேவையில்லாமல் வெளியில் செல்லக் கூடாது என்று அறிவுரை வழங்கினர்.