மதுரை: மதுரை மாநகர காவல் ஆணையர் திரு.பிரேம் ஆனந்த் சின்கா உத்தரவின்பேரில் தனிப்படை போலீசார் அவனியாபுரம் பகுதியில் தீவிர சோதனை செய்தனர். அப்போது அவனியாபுரம் திருப்பதி நகரில் வசிக்கும் பாண்டி என்பவரது மகன் அருண் குமார் (வயது 32 ) மற்றும் அவரது நண்பர்கள் ஆட்டோ மற்றும் டூவிலரில் வந்தனர்.
அவர்களிடம் தனிப்படை போலீசார் சோதனை மேற்கொண்டதில் 240 கிலோ கஞ்சா கைப்பற்றப்பட்டது.இதில் முக்கிய குற்றவாளியான அருண்குமார் என்பவர் தப்பி ஓட்டம் மீதமுள்ள 4 பேரை போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.
மேலும் கஞ்சா கொண்டு வந்த . ஆட்டோ மற்றும் 2 சக்கர வாகனத்தை பறிமுதல் செய்து வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.
மதுரையிலிருந்து நமது நிருபர்
திரு.ரவி