திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் நத்தத்தில் நத்தம் போலீசார் சார்பாக உலக போதை பொருள் ஒழிப்பு தினத்தை முன்னிட்டு போதைப் பொருள் ஒழிப்பு விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் இருசக்கர வாகன பேரணி நடந்தது.
இதற்கு நத்தம் போலீஸ் இன்ஸ்பெக்டர் தங்க முனியசாமி தலைமை வகித்து இருசக்கர வாகன பேரணியை தொடங்கி வைத்தார். நத்தம் பஸ் ஸ்டாண்ட் அருகே உள்ள ரவுண்டானாவில் தொடங்கிய போதைப் பொருள் விழிப்புணர்வு பேரணி பள்ளப்பட்டி வழியாக கோவில்பட்டி மற்றும் போலீஸ் ஸ்டேஷன் வழியாக செந்துறை அவுட்டர் வரை சென்றது.
சிவகங்கையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்
திரு.அப்பாஸ் அலி