திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்டம், இயற்கை எழில் கொஞ்சும் கொடைக்கானல் மலைப்பகுதிகளில் தொடர்ந்து தனியார் விடுதிகள், மற்றும் டென்ட் கூடாரங்களில் கஞ்சா,போதை காளன்கள் விற்பனை செய்வதாகவும் இந்த போதைக்காக இளைஞர்கள் மலைக்கிராமங்களுக்கு படையெடுப்பதாகவும் புகார் எழுந்தது, இந்நிலையில் இரவு வேலையில் காவல் துணை கண்காணிப்பாளர் தலைமையில் 2 ஆய்வாளர்,4 உதவி காவல் ஆய்வாளர்கள் உள்ளிட்ட 20க்கும் மேற்பட்ட காவல் துறையினர் 3 குழுக்களாக பிரிந்து சுற்றுலாப்பயணிகள் வருகை அதிகமாக உள்ள வட்டக்கானல் பகுதியில் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். இந்த சோதனையில் விடுதிகளில் கஞ்சா பொட்டலங்கள் இருந்தது தெரியவந்தது, இதனையடுத்து காவல்துறையினர் கஞ்சா பொட்டலங்களை பறமுதல் செய்து, விடுதி உரிமையாளர்களுக்கும் சுற்றுலாப்பயணிகளுக்கும் வரும் நாட்களில் கஞ்சா மற்றும் போதை காளன் விற்பனை செய்தாலும், உபயோகப்படுத்தினாலும் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் காவல் துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர் இந்த சோதனையில் சுமார் 500 கிராமிற்கும் மேலான கஞ்சா பொட்டலங்கள் உள்ளன.
திண்டுக்கல்லில் இருந்து நமது குடியுரிமை நிருபர்.
திரு.அழகுராஜா