விருதுநகர் : விருதுநகர் மாவட்டம், நரிக்குடி மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் போலீசார் தீவிர ரோந்துப்பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது மேலக்குமிலங்குளம் பகுதியில் சந்தேகிக்கும் வகையில் சாக்குப்பையுடன் நின்று கொண்டிருந்த அதே பகுதியை சேர்ந்த சோலைமலை மகன் வடமலை (63). என்பவரை போலீசார் சோதனை மேற்கொண்டனர். அப்போது அரசு அனுமதியின்றி சட்ட விரோதமாக விற்பனை செய்வதற்காக அவரிடமிருந்த சுமார் 7 மதுபான பாட்டில்களை அதிரடியாக பறிமுதல் செய்த நரிக்குடி போலீசார் சட்ட விரோத மதுபான விற்பனை குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
விருதுநகரிலிருந்து நமது குடியுரிமை நிருபர்
திரு.முனியாண்டி