திண்டுக்கல் : திண்டுக்கல் குடைக்கார பெட்ரோல் பங்கில் நபர் ஒருவர் இருசக்கர வாகனத்தில் பெட்ரோல் போட வந்துள்ளார். ஊழியர்களும் பெட்ரோல் போட்டுள்ளனர். ஊழியர்கள் பணம் கேட்டதற்கு தராமல் வண்டியை வேகமாக ஓட்டி தப்பி ஓட முயன்றுள்ளார்.
ஊழியர்கள் வேகமாக இருசக்கர வாகனத்தையும் அவரையும் பிடித்து விசாரித்ததில், வண்டியில் வந்த நபர் செங்கல்பட்டை சேர்ந்த சம்பத் என்பதும் அந்த இருசக்கர வாகனம் திருட்டு வாகனம் என்பது தெரியவந்தது. பங்க் ஊழியர்கள் காவல்துறைக்கு தகவல் கொடுத்ததின் பேரில், வடக்கு காவல் நிலைய போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மதுரையிலிருந்து நமது நிருபர்

திரு.ரவி