திருவள்ளூர்: சென்னை ஸ்ரீபெரும்புதூரை சேர்ந்த தனியார் ஏற்றுமதி இறக்குமதி நிறுவனம் ஒன்று லண்டனிலிருந்து 2கண்டைனர்கள் மூலம் சுமார் 39 டன் வெள்ளிக்கட்டிகளை இறக்குமதி செய்தது. 2கண்டெய்னர்கள் மூலம் வந்த வெள்ளி கட்டிகளை துறைமுகத்திலிருந்து லாரிகள் மூலம் தங்களது வேர் ஹவுஸ் நிறுவனத்திற்கு கொண்டு சென்று தனியார் நிறுவனம் ஆய்வு செய்தது. இதில் சுமார் 9 கோடி ரூபாய் மதிப்பிலான 922 கிலோ எடை கொண்ட 30 வெள்ளிக்கட்டிகள் மாயமானது தெரியவந்தது. இதனை தொடர்ந்து கண்டெய்னரில் பொருத்தப்பட்டிருந்த ஜிபிஎஸ் கருவியை ஆய்வு செய்த போது அதானி துறைமுகத்திலிருந்து சரக்குகளை வெளியே அனுப்புவதற்கு முன்பாக கண்டெய்னர் பெட்டி திறக்கப்பட்டிருப்பது உறுதியானது.
இதனையடுத்து தனியார் நிறுவனத்தின் மேலாளர் தாசரி ஸ்ரீஹரி ராவ் இது தொடர்பாக காட்டூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இந்த புகாரின் பேரில் காட்டூர் போலீசார் வழக்கு பதிவு செய்து தனிப்படைகள் அமைத்து தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். இதில் 12 பேர் கைது செய்யப்பட்டு அவர்களிடம் இருந்து வெள்ளி கட்டிகள் மீட்கப்பட்டன. இதனையடுத்து 3 உதவி ஆணையர்கள் தலைமையிலான தனிப்படை போலீசாரை ஆவடி மாநகர காவல் ஆணையர் சங்கர் நேரில் அழைத்து பாராட்டி வெகுமதி வழங்கினார்.
திருவள்ளூரில் இருந்து குடியுரிமை நிருபர்

திரு. பாபு