மதுரை: கரோனா நோய் தொற்று பரவலை தடுக்கும் பொருட்டு தமிழக அரசு முழு ஊரடங்கு உத்தரவு பிறப்பித்து அமலில் உள்ளது. இதையொட்டி போலீசார் ஊரடங்கை அமல்படுத்தி பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி பல்வேறு சிரமமான சூழ்நிலையில் கரோனா ஊரடங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
காவல் துறையினரின் பாதுகாப்புக்காக கிராமீன் கூட்டா நிதி நிறுவன சார்பில் காவல்துறையினருக்கு ரூபாய் 30000 செலவில் கரோனா தடுப்பு உபகரணங்கள் வழங்கியுள்ளனர்.
அதன்படி பேரையூர்,சாப்டூர்,எம்.கல்லுப்பட்டி மற்றும் காவல் நிலையங்களிலும் பணிபுரியும் காவல்துறையினர் அனைவருக்கும் முகத்திரைகள், கையுறைகள், முகக் கவசங்கள், கிருமிநாசினிகள் மற்றும் கரோனா தடுப்பு உபகரணங்கள் வழங்கப்பட்டது.
மதுரையிலிருந்து நமது நிருபர்
திரு.ரவி