தூத்துக்குடி : மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் (28.10.2025) மாலை தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டிக்கு வருகை புரிவதை முன்னிட்டு தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. ஆல்பர்ட் ஜான் இ.கா.ப அவர்கள் இன்று கோவில்பட்டிக்கு நேரில் சென்று போலீசாரின் பாதுகாப்பு பணிகள் குறித்து ஆய்வு செய்தார். இந்நிகழ்வின் போது தூத்துக்குடி காவல்துறை கூடுதல் கண்காணிப்பாளர்கள் திரு. ஆறுமுகம், திரு. தீபு மற்றும் கோவில்பட்டி உட்கோட்ட காவல் துணை கண்காணிப்பாளர் திரு. ஜெகநாதன் உட்பட காவல்துறை அதிகாரிகள் உடனிருந்தனர்.
















