திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் பழனி அடுத்த சத்திரப்பட்டி பகுதியில் செங்கல் சேம்பர்கள் அதிகம் செயல்பட்டு வருகிறது. தனியார் செங்கல் சூளைக்குள் காரில் வந்த சந்திரசேகர் என்பவர் தன்னை வருமான வரித்துறை அதிகாரியாக அறிமுகம் செய்து கொண்டு அடையாள அட்டையை காண்பித்துள்ளார். மேலும் சேம்பரில் வரும் வருமானத்திற்கு குறைவாக கணக்கு காட்டுவதாக புகார் வந்துள்ளதாகக் கூறி பணம் பறிக்க முயன்றுள்ளார்.
இதையடுத்து சந்திரசேகரின் நடவடிக்கைகளில் சந்தேகம் அடைந்த செங்கல் சூளை மேலாளர் சத்திரப்பட்டி போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளார். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், சந்திரசேகரிடம் அடையாள அட்டையை பெற்று விசாரணை மேற்கொண்டுள்ளனர். அப்போது செந்தில்குமார் வருமான வரித்துறை அதிகாரி போல நடித்து பணம் பறிக்க முயன்றது தெரியவந்துள்ளது. இதைத் தொடர்ந்து சந்திரசேகரை கைது செய்த போலீசார், காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் அந்தப் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
திண்டுக்கல்லில் இருந்து நமது குடியுரிமை நிருபர்.

திரு.அழகுராஜா