கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அட்கோ காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கதிரேப்பள்ளி கிராமத்தில் வேடியப்பன் என்பவருக்கு சொந்தமான கடையில் ஆங்கில மருத்துவம் படிக்காமல் டாக்டர் என கூறி அலோபதி மருந்துகள் மற்றும் மருத்துவ உபகரணங்களை கொண்டு சிகிச்சை அளிப்பதாக ஓசூர் முதன்மை மருத்துவர் அவர்களுக்கு கிடைத்த தகவலின் பேரில் தணிக்கை குழுவுடன் அங்கு சென்று எதிரியின் கிளினிக்கை தணிக்கை செய்து அலோபதி மருந்துகள், மருத்துவ உபகரணங்கள் கைப்பற்றி கிளினிக்கிற்க்கு சீல் வைத்து விட்டு மேற்படி முதன்மை மருத்துவர் காவல் நிலையம் வந்து போலி மருத்துவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டி கொடுத்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார் குற்றவாளியை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
கிருஷ்ணகிரியிலிருந்து நமது குடியுரிமை நிருபர்

திரு.S.அஸ்வின்