மதுரை : மதுரை மாவட்டம், பேரையூர் உட்கோட்டத்தில் மதுரை மாவட்ட காவல்துறை மற்றும் சுகாதாரத்துறை அலுவலர்களால் நடத்தப்பட்ட கூட்டு சோதனையில் நாகையாபுரம் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட வெங்கடேஷ்வரபுரத்தைச் சேர்ந்த கோட்டை மலை என்பவரது மகன் ராஜகோபால் (63). என்பவர் 9-ஆம் வகுப்பு வரை மட்டுமே படித்துவர் முறையான மருத்துவ படிப்பு எதுவும் மேற்கொள்ளாமல் அந்த பகுதியில் உள்ள மக்களுக்கு அலோபதி மருத்துவ சிகிச்சை அளித்து வந்தது கண்டறியப்பட்டு பேரையூர் அரசு மருத்துவமனை தலைமை மருத்துவர் திருமதி.வசந்தலெட்சுமி என்பவர் கொடுத்த புகாரின் அடிப்படையில் மேற்படி போலி மருத்துவர் மீது நாகையாபுரம் காவல் நிலைய குற்ற எண். 75/23 பிரிவு 419,429, 406 இ.த.ச மற்றும் 15(3) இந்திய மருத்துவ கவுன்சில் சட்டம் 1956-ன் படி வழக்கு பதிவு செய்து மேற்படி போலி மருத்துவர் கைது செய்யப்பட்டு நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளார் என்ற விவரம் தெரிவித்துக் கொள்ளப்படுகிறது.
மதுரையிலிருந்து நமது குடியுரிமைநிருபர்

திரு.விஜயராஜ்