திருநெல்வேலி : திருநெல்வேலி மற்றும் தூத்துக்குடி பகுதிகளில் போலி மதுபான பாட்டில்களை விற்பனை செய்து மதுவிலக்கு குற்றங்களில் ஈடுபட்டு வந்த பாளையங்கோட்டை, எம்.கே.பி. நகரை சேர்ந்த ஜெயராஜ், மகன் அருள்இம்மானுவேல் ஸ்டீபன்(47). ராஜா(34). இருவரையும் குண்டர் சட்டத்தில் அடைக்க மாநகர காவல் துணை ஆணையர், V.கீதா,(மேற்கு) சந்திப்பு சரக காவல் உதவி ஆணையர் வெங்கடேசன், மாநகர மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு காவல் ஆய்வாளர், இந்திரா ஆகியோரின் பரிந்துரைப்படி திருநெல்வேலி மாநகர காவல் ஆணையர், ரூபேஷ் குமார் மீனா, இ.கா..ப., உத்தரவின்படி (08.10.2024) -ம் தேதி தமிழ்நாடு சட்டம் 14/1982-ன் கீழ் பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.
திருநெல்வேலியில் இருந்து நமது குடியுரிமை நிருபர்
சண்முகநாதன்