தென்காசி: தென்காசி மாவட்டம், ராஜாங்கபுரம் பகுதியை சேர்ந்த சீதாலட்சுமி என்பவரின் தந்தை கருப்பசாமி,அவருக்கு சொந்தமான ரூபாய் 8 லட்சம் மதிப்பிலான நிலத்தை முருகையா என்பவருக்கு பவர் கொடுத்துள்ளார்.
பின்னர் கருப்பசாமி மறைந்த பின்பு முருகைய்யாவுக்கு பவர் கொடுக்கப்பட்ட இடம் தன்னுடையது தான் என கூறி மோசடி செய்து அதே பகுதியை சேர்ந்த முத்துக்குமார் என்ற நபரிடம் விற்பனை செய்துள்ளார்.
இந்நிலையில் தங்களது நிலத்தை மீட்டு தருமாறு சீதாலட்சுமி தென்காசி மாவட்ட காவல் அலுவலகத்தில் அமைந்துள்ள நில அபகரிப்பு தடுப்பு சிறப்பு பிரிவில் கடந்த (10/11/2021) அன்று கொடுத்த புகாரின் பேரில், துணைக் காவல் கண்காணிப்பாளர் (DCB) திரு. ஆரோக்கியராஜ் அவர்கள் தலைமையில் காவல் ஆய்வாளர்(ALGSC) திருமதி. சந்தி செல்வி மற்றும் சார்பு ஆய்வாளர் திருமதி. மாரிச்செல்வி ஆகியோர் விசாரணை மேற்கொண்டு ரூபாய் 8 லட்சம் மதிப்பிலான நிலம் மீட்கப்பட்டு சீதாலட்சுமி என்பவர்களிடம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. கிருஷ்ணராஜ் IPS அவர்கள் முன்னிலையில் ஒப்படைக்கப்பட்டது.
மேலும் அபகரிக்கப்பட்ட நிலத்தை உரிய முறையில் விசாரணை மேற்கொண்ட நில அபகரிப்பு தடுப்பு சிறப்பு பிரிவில் பணிபுரியும் காவல் அதிகாரிகள் மற்றும் ஆளிநர்களை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வெகுவாக பாராட்டினார்.