திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அடுத்த ஞாயிறு கிராமத்தை சேர்ந்தவர் ராமநாதன். இவருக்கு அதே கிராமத்தில் அமைந்துள்ள இடத்தை பவுல் சங்கர் என்பவரிடமிருந்து கிரையம் பெற்றுள்ளார். வேறு ஒருவரது குடும்ப சொத்தான சுமார் 1.5 கோடி ரூபாய் மதிப்பிலான 3 ஏக்கர் 12 சென்ட் நிலத்தை பவுல் சங்கர் போலி ஆவணங்கள் மூலம் வெவ்வேறு நபர்களுக்கு செட்டில்மென்ட் கொடுத்து மோசடி செய்துள்ளார். இதனை அறிந்த ராமநாதன் தம்மை போலி ஆவணங்களை கொண்டு நிலத்தை விற்று மோசடி செய்த பவுல் சங்கர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி ஆவடி காவல் ஆணையரக மத்திய குற்றப்பிரிவு போலீசில் புகார் அளித்தார். இந்த புகாரின் பேரில் மோசடி வழக்கு பதிவு செய்த மத்திய குற்றப்பிரிவு போலீசார் மீஞ்சூர் அடுத்த நாலூர் கிராமத்தை சேர்ந்த பவுல் சங்கரை (54). கைது செய்து சிறையில் அடைத்தனர்.
திருவள்ளூரில் இருந்து குடியுரிமை நிருபர்
திரு. பாபு