தென்காசி : தென்காசி மாவட்டம்,செங்கோட்டை காவல் நிலைய எல்கைகுட்பட்ட பண்பொழி சார்பதிவாளர் அலுவலகத்தில் கடந்த (20.10.2022) ம் தேதி மீனாட்சிபுரத்தைச் சேர்ந்த கணபதி( லேட்) என்பவரின் 36 சென்ட் நிலத்தை அதே பகுதியைச் சேர்ந்த சேகர் முருகன் (41). என்பவர் ஆதார் அட்டையில் பெயர் மாறுதல் செய்து உடையார் என்பவரின் மனைவியான செல்லம் (48), என்பவருக்கு எழுதிக் கொடுக்க வந்தவரை பத்திரப்பதிவின் போது கைரேகை வைக்கும் உண்மையான பெயரான சேகர் முருகன் என்பதை காட்டியதன் அடிப்படையில், பொய்யாக பத்திரப்பதிவு செய்ய வந்துள்ளனர் என்பதை உணர்ந்து பண்பொழி சார்பதிவாளர் திரு. செல்வகுமார் செங்கோட்டை காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்து மேற்படி இடத்தை விற்க முயன்ற சேகர் முருகன்,அதை வாங்க வந்த செல்லம்,அதற்கு சாட்சி கையெழுத்து போட்ட ஆறுமுகசாமி (38), முத்துகுமார்(35) மற்றும் பத்திரப்பதிவு செய்த பண்பொழி அழகுதுரை (62) ஆகியோரை செங்கோட்டை காவல் ஆய்வாளர் திரு.ஷியாம் சுந்தர் அவர்களின் தலைமையில் சார்பு ஆய்வாளர் திரு.சரசையன், தனிபிரிவு காவலர் திரு.அரவிந்த், தலைமைகாவலர் திரு.கருப்பசாமி, முதல்நிலை காவலர்கள் திரு.ரமேஷ்,திரு.சுப்பிரமணி,காவலர்கள் திரு.சுரேஷ், திரு.ராஜசேகர், ஆகியோர் அடங்கிய தனிப்படையினர் கைது செய்து நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தி சிறையில் அடைத்தனர்.