மதுரை: சமூக வலைதளங்களில் குழந்தை கடத்தல் தொடர்பாக தவறான செய்தி பகிரப்பட்டு வருவது தொடர்பாக மதுரை மாநகரில் உள்ள கல்லூரிகளில் மாநகர காவல் துறை சார்பில் இது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. குழந்தை கடத்தல் தொடர்பாக போலியான வதந்தியை பரப்ப வேண்டாம் என்றும், பரப்புபவர்கள் மீது சட்டப்படியான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் இது தொடர்பான தகவல்கள் ஏதும் இருப்பின் காவல்துறை உதவி எண் 100 க்கு தொடர்பு கொண்டு தெரிவிக்குமாறும், அருகில் உள்ள காவல் நிலையத்திற்கு தகவல் அளிக்கலாம் என்றும் தெரிவிக்கப்பட்டது
மதுரையிலிருந்து நமது குடியுரிமைநிருபர்
திரு.விஜயராஜ்