திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்டம் பழனி அடிவாரம் பகுதியில் ஆக்கிரமிப்பு கடைகள் நீதிமன்றம் உத்தரவின்படி 10-க்கும் மேற்பட்ட சாலையோர சிறு,குறு கடைகள் அகற்றப்பட்ட நிலையில் சாலையோர வியாபாரிகளின் வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டு இதுவரை மாற்று இடம் வழங்கப்படாததால் கார்த்திகை, மார்கழி ,தை மாதம் போன்ற சீசன் துவங்க உள்ளதால் தங்களுடைய வாழ்வாதாரம் கேள்விக்குறியாகி உள்ளதாக கூறி அடிவாரம் சாலையோர வியாபாரிகளின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க கோரி காத்திருப்பு போராட்டம் சார் ஆட்சியர் அலுவலகம் முன்பு காலை முதல் நடைபெற்று வருகிறது.
இதில் ஏராளமான வியாபாரிகள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்ட நிலையில் சார் ஆட்சியர் கிசன் குமாரிடம் மனு அளித்து பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். 2 நாட்களில் ஏற்பாடு செய்து தருவதாக கூறபடுகிறது , ஆனால் வியாபாரிகள் கலைந்து செல்ல மறுத்தனர். காவல் துறையினர் பேச்சுவார்த்தையிலும் சமரசம் ஏற்படாததையடுத்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களை் 100-க்கும் மேற்பட்டோரை போலீசார் கைது செய்தனர்.
திண்டுக்கல்லில் இருந்து நமது குடியுரிமை நிருபர்.
திரு.அழகுராஜா