திருப்பத்தூர் : திருப்பத்தூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர்.பாலகிருஷ்ணன்,BVSc., அவர்களின் உத்தரவின்பேரில் (23.04.2023) கள்ளச்சாராயம் விற்பனையாளர்களை கண்டுபிடித்து அவர்கள் மீது சட்டபூர்வ நடவடிக்கை எடுக்கப்பட்டது அதை தொடர்ந்து. (24/04/2023) தமிழ்நாடு ஆந்திர மாநில எல்லையை ஒட்டியுள்ள கொரிப்பள்ளம், மாதகடப்பா மற்றும் புதூர் நாடு மலைப்பகுதியில் 3 ஆய்வாளர்கள் 15 காவல் உதவி ஆய்வாளர்கள் 38 காவலர்கள் கொண்ட 3 குழு மாவட்டம் முழுவதும் நடத்திய மதுவிலக்கு சோதனையில் மொத்தம் 1000 லிட்டர் கள்ளச்சாராயம், 12,050 லிட்டர் சாராய ஊறலும் சாராய ஊறல் தயாரிக்க பயன்படுத்தப்பட்ட பொருட்கள் அழித்தொழிக்கப்பட்டுள்ளது. திருப்பத்தூர் மாவட்டத்தில் கள்ளச்சாராயம் முற்றிலுமாக ஒழிக்க அனைத்து நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது எனவும் கள்ளச்சாராயம் தயாரிப்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் மேலும் மதுவிலக்கு வேட்டை தொடர்ந்து நடைபெறும் எனவும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர்.பாலகிருஷ்ணன்,BVSc., அவர்கள் தெரிவித்துள்ளார்.