திண்டுக்கல் : திண்டுக்கல்லுக்கு கஞ்சா விற்பனை செய்ய வருவதாக திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாஸ்கரன், கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் மதுவிலக்கு DSP நாகராஜன், மேற்பார்வையில் ஆய்வாளர் புஷ்பா, தலைமையிலான போலீசார் பழனி ரோடு ராமையன்பட்டி அருகே தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது வேகமாக வந்த காரை நிறுத்தி சோதனை செய்ததில் கஞ்சா விற்பனை செய்வதற்காக கொண்டு செல்லப்பட்டது தெரியவந்தது. இதனையடுத்து மதுவிலக்கு போலீசார் கோயம்புத்தூரை சேர்ந்த கருப்பையா (40), திருப்பூர் மாவட்டத்தை சேர்ந்த தினேஷ் (22), தணிகைவேலன்(28) ஆகிய 3 பேரை கைது செய்து அவர்களிடமிருந்து 4 கிலோ கஞ்சா, கடத்தலுக்கு பயன்படுத்திய கார் ஆகியவற்றை பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.