தாம்பரம் : கஞ்சா,ஹெராயின் முதலிய போதை பொருட்களை உட்கொண்டு இளைஞர்களும் மாணவர்களும் தம் உடல் நலத்தையும் மனநலத்தையும் கெடுத்துக் கொள்ளக் கூடாது என்பதை விளக்கும் வகையில் தாம்பரம் மாநகர காவல் துறை கிரியாஸ் நிறுவனத்துடன் இணைந்து குறும்படங்களை தயாரித்து வெளியிடுகிறது. அரை நிமிடம் மட்டுமே ஓடக்கூடிய இந்த குறும்படங்களை பார்ப்பவர்கள் மனதில் அவற்றின் செய்தி ஆழப் பதியும்படி எடுக்கப்பட்டுள்ளன. போதை பொருட்களை பயன்படுத்தி தொடங்குபவர்கள் யார் யாருடைய தொடர்பினால் அவற்றை முதன்முதலில் பயன்படுத்தி தொடங்குகிறார்கள் என்பதையும் போதை பொருட்களை யார் கொடுத்தாலும் அவற்றை ஏற்றுக்கொள்ளாமல் முதன் முறையே மறுக்க வேண்டும் என்பதையும் இக்குறும்படங்கள் வலியுறுத்துகின்றன. மிக எளிமையாக அனைவருக்கும் புரியும் வகையில் எடுக்கப்பட்டுள்ள இக்குறும்படங்களில் ஒன்றை (29/6/2023)ஆம் தேதி தாம்பரம் மாநகர காவல் ஆணையர் முனைவர் திரு.அமல்ராஜ் இ.கா,ப, அவர்கள் வெளியிட்டுள்ளார்.
காஞ்சிபுரத்திலிருந்து நமது குடியுரிமை நிருபர்
திரு.ராஜ் கமல்