திருநெல்வேலி: திருநெல்வேலி மூலக்கரைப்பட்டி பகுதியில் போதை மாத்திரைகள் விற்பனை நடைபெறுவதாக கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் காவல்துறையினர் ரோந்து பணியில் இருந்தனர். அப்போது அரசனார்குளம் பஸ் ஸ்டாப் அருகே சந்தேகத்திற்கு இடமான வகையில் நின்று கொண்டிருந்த அம்பலம், மேற்கு தெருவை சேர்ந்த ஜோசப் (21). என்பவரை சோதனை செய்ததில் போதை மாத்திரைகளை அதிக விலைக்கு விற்பனை செய்வதற்காக வைத்திருந்தது தெரியவந்தது. இதையடுத்து காவல் உதவி ஆய்வாளர், பார்த்திபன் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு ஜோசப்பை (28.07.2025) அன்று கைது செய்து, அவரிடமிருந்து போதைப் மாத்திரைகளை பறிமுதல் செய்து சட்ட நடவடிக்கை மேற்கொண்டு வருகிறார்.
திருநெல்வேலியில் இருந்து நமது குடியுரிமை நிருபர்

சண்முகநாதன்