நெல்லை: பாளையில் இளைஞர்களுக்கு போதை மாத்திரை விற்பனை செய்த மருந்தக உரிமையாளரை போலீசார் கைது செய்தனர். பாளை., சமாதானபுரம் பகுதியில் ஒரு மருந்தகத்தில் போதைக்கு உபயோகபடுத்தப்படும் மாத்திரைகள் விற்பனை செய்யப்படுவதாக போலீசார்க்கு ரகசிய தகவல் வந்தது.
இதையடுத்து பாளை., போலீசார் சமாதனபுரத்தில் உள்ள அந்த மருந்தகத்திற்கு சென்று சோதனை நடத்தினர். இதில் அந்த கடையின் உரிமையாளர் தேவராஜ் போதை மாத்திரை விற்பனை செய்தது கண்டுபிடிக்கப்பட்டது
இதையடுத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து தேவராஜை கைது செய்தனர்.