திருவண்ணாமலை : இன்று (05.12.2023) திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் காவல்நிலைய எல்லைக்குட்பட்ட அரட்டவாடி அரசினர் மேல்நிலைப் பள்ளயில், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை சார்பாக நடத்தப்பட்ட பேரணியை, மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.பா.முருகேஷ், இ.ஆ.ப., அவர்கள் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மரு.கி.கார்த்திகேயன், இ.கா.ப., அவர்கள் கொடியாசைத்து துவக்கி வைத்தனர். இதில் மது அருந்துதல், மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டுதல் மற்றும் போதை பொருள் பயன்பாட்டுக்கு எதிரான விழிப்புணர்வை பொதுமக்கள் மற்றும் மாணவ, மாணவிகளுக்கிடையே ஏற்படுத்தப்பட்டது. மேலும் அப்பள்ளியில் முதல் மதிபெண் பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பாராட்டு சான்றிதழ்கள் மற்றும் கேடயம் வழங்கப்பட்டது.