மதுரை உசிலம்பட்டி ஆர்.சி. பெண்கள் மேல்நிலைப் பள்ளி சார்பில், மனித கடத்தல்கள், சமூக பாதுகாப்பு , சிசு கொலைகள் மற்றும் போதை பொருள் ஒழிப்பு குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. மதுரை மாவட்டம், உசிலம்பட்டி ஆர்.சி. பெண்கள் மேல்நிலைப் பளிளியின் சார்பில், மனித கடத்தல்கள், சமூக பாதுகாப்பு, சிசு கொலைகள் மற்றும் போதை பொருள் ஒழிப்பு குறித்து விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.
இந்த பேரணியை, பள்ளித் தலைமை ஆசிரியர் மெர்சி முன்னிலையில் உசிலம்பட்டி நகர் காவல் நிலைய சார்பு ஆய்வாளர் சரவணக்குமார் தலைமையில் கொடியசைத்து துவக்கி வைத்தனர். இந்த பேரணி, ஆர்.சி. பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் துவங்கி மதுரை சாலை, தேவர்சிலை, தேனி சாலை என உசிலம்பட்டியின் முக்கிய சாலைகள் வழியாக ஊர்வலமாக சென்று சுமார் 500 க்கும் மேற்பட்ட பள்ளி மாணவிகள் மனித கடத்தல்கள், சமூக பாதுகாப்பு, சிசு கொலைகள் மற்றும் போதை பொருள் ஒழிப்பு குறித்து கையில் பதாகைகளை ஏந்தி பொதுமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தி பள்ளியில் நிறைவு செய்தனர். இதில் ,பள்ளி ஆசிரியர்கள் பலர் கலந்து கொண்டனர்.
மதுரையிலிருந்து நமது நிருபர்

திரு.ரவி