திருநெல்வேலி: தென் தமிழகத்தில் உள்ள திருநெல்வேலி தூத்துக்குடி தென்காசி கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் உள்ள கல்லூரிகளில் போதை பொருட்கள் குறித்த விழிப்புணர்வு கருத்தரங்குகள் நடத்துவது பற்றிய கலந்தாய்வு கூட்டம் இன்று காவல்துறை துணைத் தலைவர் பா. மூர்த்தி இ.கா.பா., தலைமையில் நடைபெற்றது. இந்த கலந்தாய்வு கூட்டத்திற்கு திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் N. சிலம்பரசன் இ.கா.ப., முன்னிலை வகித்தார். இக்கூட்டத்தில் போதைப்பொருள் நடமாட்டத்தை கட்டுப்படுத்தவும் பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் போதை பொருள் தடுப்பு விழிப்புணர்வு பிரச்சாரங்களை அதிகரிக்கவும் போதை பொருட்கள் எந்த வடிவில் வந்தாலும் அதை ஒழிக்க தீவிரமாக நடவடிக்கை மேற்கொள்ளவும் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் காவல்துறைக்கு ஏற்கனவே உத்தரவிட்டு உள்ளதை குறிப்பிட்டு, இந்தக் கூட்டத்தில் திருநெல்வேலி கன்னியாகுமரி தூத்துக்குடி தென்காசி ஆகிய மாவட்டங்களில் உள்ள கல்லூரி முதல்வர்களுக்கு கல்லூரியில் போதை பொருள் தடுப்பு குழுக்களை உருவாக்குவது குறித்த கலந்தாய்வு கூட்டம் திருநெல்வேலியில் நடத்துவது.
அதை தொடர்ந்து போதைப் பொருட்கள் தடுப்பு குழுவினர், ஆசிரியர், ஒருங்கிணைப்பாளர், மற்றும் மாணவ மாணவியருக்கு ஒரு நாள் பயிலரங்கை மேற்கண்ட நான்கு மாவட்டங்களில் நடத்துவது என்றும் போதை விழிப்புணர்வு பிரச்சாரங்களை சிறப்பாக நடத்தி அவற்றின் தொடர் செயல்பாடுகளை மேம்படுத்த அரசின் மற்ற துறைகளுடன் இணைந்து விழிப்புணர்வு நடத்த தீர்மானிக்கப்பட்டது. இக்கூட்டத்தில் அனைத்து மாவட்ட மதுவிலக்கு அமலாக்க பிரிவு காவல் துணை கண்காணிப்பாளர் உட்பட அனைவரும் கலந்து கொண்டனர்.
திருநெல்வேலியில் இருந்து நமது குடியுரிமை நிருபர்
சண்முகநாதன்