கடலூர் : கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. S. ஜெயக்குமார் IPS அவர்கள் போதை பொருட்களை கடத்தி விற்பனை செய்யும் நபர்களை கண்காணித்து கைது செய்து நடவடிக்கை எடுக்குமாறு பிறப்பித்த உத்தரவின்பேரில் சேத்தியாதோப்பு துணை காவல் கண்காணிப்பாளர் திரு. விஜிகுமார் அவர்கள் மேற்பார்வையில், ஸ்ரீமுஷ்ணம் காவல் ஆய்வாளர் திரு. வீரசேகரன், காவல் கண்காணிப்பாளர் அவர்களின் தனிப்படை உதவி ஆய்வாளர் ராஜா மற்றும் போலீசார் ஸ்ரீமுஷ்ணம் To அரியலூர் செல்லும் சாலையில் வாகன தணிக்கையில் இருந்தபோது, வந்த Santro கார் மற்றும் TN MAHINDRA Auto வாகனங்களை நிறுத்தி சோதனை செய்தபோது 110 கிலோ போதை குட்கா பொருட்கள் இருந்தது. கார், Auto மற்றும் போதை பொருட்களை கைப்பற்றி வெங்கடேசன் வயது (48). , ஸ்ரீமுஷ்ணம், கிளின்டன்ராஜ் வயது (27). ஆண்டிமடம், அரியலூர், சுரேஷ் வயது (30). ஸ்ரீமுஷ்ணம், மணிகண்டன் ஸ்ரீமுஷ்ணம் ஆகியோர்களை கைது செய்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.