திருவள்ளூர் : போதைப் பொருட்கள் இல்லாத திருவள்ளூர் கள்ளச்சாராயம் போதை பொருட்கள் மூலம் ஏற்படும் பாதிப்புகள் குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறைய சார்பில் பொன்னேரி அரசு உலகநாத நாராயணசாமி அரசினர் கலைக்கல்லூரியில் மாவட்ட ஆட்சியர் பிரதாப் தலைமையில் நடைபெற்றது. போதை பொருள்களுக்கு எதிராக பல்வேறு வண்ணமயமான கோலங்களை கல்லூரி மாணவர்கள் வரைந்து அசத்தினர் பின்னர் பல்வேறு தப்பாட்டம் பரதம் உள்ளிட்ட பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கி பாராட்டினர். முன்னதாக போதை பொருட்களுக்கு எதிராக கல்லூரி மாணவர்களின் விழிப்புணர்வு பேரணியை மாவட்ட ஆட்சியர் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
போதைப் பொருட்களுக்கு எதிரான பதாகைகளை கைகளில் ஏந்தி முக்கிய வீதிகள் வழியாக பேரணியாக சென்று பொது மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தினர். பின்னர் போதைப் பொருட்களுக்கு எதிரான கையெழுத்து இயக்கத்தை தொடங்கி வைத்து ஆட்சியர் பேசுகையில் போதைப் பொருட்களால் ஆண்டுதோறும் பத்தாயிரம் பேர் தற்கொலை செய்து கொள்வதாகவும் திருவள்ளூர் மாவட்டத்தில் 1300 இடங்களில் சோதனை மேற்கொண்டு 350 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்துள்ளதாகவும் போதை மாத்திரை உள்ளிட்ட வைகளை ஆறு சோதனை சாவடிகளில் 24 மணி நேரமும் சோதனை மேற்கொண்டு பறிமுதல் செய்து வருவதாகவும் பள்ளி கல்லூரிகள் அருகே போதைப்பொருட்கள் விற்பனை செய்தால் கடைகளை மூடி சீல் வைத்து நடவடிக்கை எடுக்கப்படும் என ஆட்சியர் மு பிரதாப் தெரிவித்தார்.
திருவள்ளூரில் இருந்து குடியுரிமை நிருபர்

திரு. பாபு