திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டம், மீஞ்சூரில் போதைப் பொருட்களை ஒழிப்பதற்கும் சமூக விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்கும் இளைஞர்களுக்கான விழிப்புணர்வு நிகழ்ச்சி பஜார் வீதியில் நடைபெற்றது. அத்திப்பட்டு அன்னை அன்பாலயா தொண்டு நிறுவனம்,சீனிவாசன் மெமோரியல் சார்டிபல் ட்ரிஸ்ட், நந்தனார் சேவராஸ்மா அறக்கட்டளை, மேலூர் அக்னிச் சிறகுகள், வஞ்சிவாக்கம்கற்கை நன்று கல்வி அறக்கட்டளை, இயற்கை அரண் அறக்கட்டளை ,இருக்கரங்கள் இணைப்போம்,எமிமா மெமோரியல் சாரிடபல் டிரஸ்ட், வழுதி கைமேடு
பிரபஞ்சம் சமூக கல்வி அறக்கட்டளை, அருள் மாஸ்டரின் பௌன்ஸ் அண்ட் குரூப்ஸ் டான்ஸ் அகாடமி, சார்லஸ் மாஸ்டரின் ஸ்பார்டன் ஜிம் ஆகிய சமூக அமைப்புகள் தொண்டு நிறுவனங்கள் இணைந்து நடத்திய இந்த நிகழ்ச்சியில் ஆதித்தமிழர் விடுதலை இயக்கத்தின் பறையாட்டத்துடன் நிகழ்ச்சி துவங்கியது.
மீஞ்சூர் குரு.நிருத்த கலைச்சுடர்,சுரேஷ் குழுவினரின் பரதநாட்டியத்தை தொடர்ந்து வழுதிகை மேடு பிரபஞ்சம் சமூக கல்வி அறக்கட்டளை குழுவினரின் போதை இல்லா வாழ்க்கை சுகமான வாழ்க்கை என்ற தலைப்பில் நாடகம், மாஸ்டர் அருள் பவுன்ஸ் & க்ரூவ்ஸ் டான்ஸ் அகாடமி குழுவினர் நடத்திய போதையால் ஏற்படும் விளைவுகள், போதையால் பாதிக்கும் குடும்பங்களின் நிலை குறித்து சிறப்பு விழிப்புணர்வு குழு நடனம் நடைபெற்றது. சூலை சுப்பா பக்தர் பரம்பரை-1831 உயிர்க்கலை நேஷனல் சிலம்பம் கூட்டத்தின் ஓம் பிரகாஷ் குழுவினரின் சிலம்பாட்டம்,வஞ்சிவாக்கம்கற்கை நன்று கல்வி அறக்கட்டளை குழுவினரின் போதையின் ராஜா என்ற தலைப்பிலும் மற்றும் ஏன் இந்த போதை என்ற தலைப்பிலும் நாடகம் நடைபெற்றது. சென்னை- இரு கரங்கள் இணைப்போம் குழுவினரின் போதையே அழிவின் பாதை
நாடகமும், இயற்கை அறன் சமூக அறக்கட்டளை வழங்கும் போதையின் தீமை குறித்து முழக்கமும் நடைபெற்றது.
ஸ்பார்டன் ஜிம் சார்லஸ் மாஸ்டர் குழுவினர் சார்பில் வளமான உடலும் நலமான உள்ளமும் நிலையான வாழ்வு எனும் தலைப்பில் உடற்கட்டு அழகை காண்பித்தல் நடைபெற்றது.
ஐந்தாம் வகுப்பு மாணவி ரேயாஸ்ரீயின் போதைக்கு எதிரான பேச்சு அனைவரையும் கவர்ந்தது.
நிகழ்ச்சியில் பங்கு பெற்றவர்களுக்கு மேலூர் புதிய தலைமுறை அக்னிச் சிறகுகள் கிராம சேவை மையம் உறுதணயில் நடைபெற்ற நிகழ்ச்சியில் சீனிவாசன் மெமோரியல் சாரிடபிள் டிரஸ்ட் பிரீத்தி, சேவாரஸ்மா அறக்கட்டளை இயக்குனர் தடா பெரியசாமி, ஆதித்தமிழர் விடுதலை இயக்க நிர்வாகி இளஞ்செழியன், சீனிவாசன் சார்ட்டபிள் டிரஸ்ட் நிர்வாகி பிரீத்தி, மேலூர் சமூக ஆர்வலர் நி.நெல்சன், வணிகர் சங்க பேரவையின் திருவள்ளூர் கிழக்கு மாவட்ட செயலாளர் ஷேக் அகமது ஆகியோர் நினைவு பரிசுகள் மெடல்கள் வழங்கினர்.
குறிப்பாக நிகழ்ச்சியில் சிறப்பாக கலந்து கொண்ட மீஞ்சூர் காவல்துறை ஆய்வாளர் வேலுமணி மீஞ்சூர் பகுதியில் கஞ்சா உள்ளிட்ட போதை வஸ்துகளை அறவே ஒழிப்பதற்கு வியாபாரிகளும் பொதுமக்களும் இளைஞர்களும் ஒத்துழைக்க வேண்டும் என கேட்டுக்கொண்டார். அரசு அதிகாரிகள், அரசியல் பிரமுகர்கள், காவல்துறை அதிகாரிகள் வழக்கறிஞர்கள், ஆசிரியர்கள் – மாணவ, மாணவிகள்- வணிக சங்க நிர்வாகிகள் சமூக ஆர்வளர்கள் – பொதுமக்கள் இளைஞர்கள் மற்றும் பெரியோர்கள் பலர் இதில் கலந்து கொண்டனர் .
திருவள்ளூரில் இருந்து குடியுரிமை நிருபர்
திரு. பாபு