தென்காசி: தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு S. அரவிந்த் அவர்களின் தலைமையில் மாவட்ட காவல் அலுவலகத்தில் பணிபுரியும் அனைத்து காவல்துறையினர் மற்றும் அமைச்சுப் பணியாளர்கள் இணைந்து போதை பழக்கத்திற்கு எதிரான உறுதிமொழி எடுத்துக் கொண்டனர். இதேபோல் மாவட்டத்தில் உள்ள அனைத்து காவல் நிலையங்களிலும் காவல்துறையினர் உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்..