விருதுநகர் : விருதுநகர் மாவட்டம், திருவில்லிபுத்தூர் பேருந்து நிலையப் பகுதியில், கஞ்சா விற்பனை நடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. தகவலின் பேரில் திருவில்லிபுத்தூர் நகர் காவல்நிலைய போலீசார், பேருந்து நலையத்தை சுற்றியுள்ள பகுதிகளில் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். அப்போது அந்தப் பகுதியில் சந்தேகப்படும் வகையில் நின்று கொண்டிருந்த ஒரு பெண்ணை பிடித்து போலீசார் விசாரித்தனர். போலீசாரிடம் சிக்கிய பெண் அதே பகுதியைச் சேர்ந்த கலைச்செல்வி (45) என்றும், அவர் விற்பனை செய்வதற்காக 2 கிலோ கஞ்சாவை பதுக்கி வைத்திருந்ததும் தெரிய வந்தது. கஞ்சாவை பதுக்கி வைத்திருந்த கலைச்செல்வியை போலீசார் கைது செய்தனர். அவர் பதுக்கி வைத்திருந்த 2 கிலோ கஞ்சாவை, போலீசார் பறிமுதல் செய்தனர்.
மதுரையிலிருந்து நமது நிருபர்