சென்னை : சென்னை தமிழக காவல்துறை இளைஞர்கள் மற்றும் பள்ளி, கல்லூரி மாணவர்களின் எதிர்காலத்தை சீரழிக்கும்போதைப்பொருட்களை விற்பனை செய்யும் நபர்கள் மீது சட்டரீதியான கடுமையான நடவடிக்கை எடுக்கவும், போதைப் பொருட்கள் நடமாட்டத்தை முற்றிலும் ஒழிக்கவும் காவல் துணை ஆணையர்கள், உதவி ஆணையர்கள் மற்றும் காவல் ஆய்வாளர்களுக்கு உரிய அறிவுரைகள் வழங்கியுள்ளார்கள். இதையடுத்து கொளத்தூர் காவல் நிலையம் சார்பாக காவல் ஆய்வாளர் திரு.லோகநாதன், அவர்கள் ஏற்பாட்டின் பேரில் போதைப்பொருள் ஒழிப்பு குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.
இதில், நியூஸ் மீடியா அசோசியேசன் ஆப் இந்தியா திரு.வி.கா. நகர் தொகுதி தலைவரும், சாலமோன் நினைவு அறக்கட்டளையின் நிறுவனருமான திரு.டேவிட், அவர்கள் போதைப்பொருட்களை உபயோகித்தால் ஏற்படும் தீமைகள் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தினார். அப்போது பேசிய அவர், போதைப்பொருட்கள் உபயோகப்படுத்துவதினால் குடும்பத்தில் ஏற்படும் பிரச்சனைகள், அவமானங்கள், உடல் ரீதியாக ஏற்படும் தீமைகள், பொருளாதார ரீதியாக ஏற்படும் இழப்புகள் குறித்து விரிவாக எடுத்துரைத்தார். இதனைத் தொடர்ந்து பேசிய காவல் ஆய்வாளர் லோகநாதன், மது அருந்திவிட்டு வாகனங்கள் ஓட்டுவதை தவிர்க்க வேண்டும் என்றும், பிள்ளைகளை பெற்றோர்கள் அவ்வப்போது கண்காணிக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தினார்.
சென்னையிலிருந்து குடியுரிமை நிருபர்
திரு. டேவிட் செல்லதுரை