திருவள்ளூர்: ஜூன் 26 சர்வதேச போதை பொருள் ஒழிப்பு தினமாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது. போதைப் பொருள் பயன்பாடு மற்றும் சட்டவிரோத போதை பொருள் கடத்துதலுக்கு எதிரான சர்வதேச தினமாக இந்நாள் அனுசரிக்கப்படுகிறது. இந்நிலையில் உலக போதை ஒழிப்பு தினத்தை முன்னிட்டு திருவள்ளூர் மாவட்டம் தமிழ்நாடு தர்காக்கள் ஜமாத் ஏற்பாட்டில் டாக்டர் செய்யத் திலவர் அலி மாவட்டத் தலைவர் ஜமாம் மொய்தீன் பொன்னேரி தலைவர் இப்தியாஸ் தலைமையில் பொன்னேரி போதகர்கள் ஐக்கிய நல சங்கத்தின் தலைவர் பிஷப் டாக்டர் ஞானராஜ் ஆஞ்சநேயர் திருக்கோயில் குருக்கள் கண்ணன் முன்னிலையில் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.
சிறப்பு அழைப்பாளராக தமிழ்நாடு காங்கிரஸ் மாநில துணைத்தலைவர் டி எல் சிவலிங்கம் பொன்னேரி நகராட்சி தலைவர் டாக்டர் பரிமளம் விஸ்வநாதன் கலந்து கொண்ட இப்பேரணி பொன்னேரி பழைய பேருந்து நிலையத்திலிருந்து போதைப் பொருளினால் ஏற்படும் தீமைகள் குறித்து கோசமிட்டு விழிப்புணர்வு ஏற்படுத்தி புகைப்பிடித்தல் புற்றுநோயை உருவாக்கும் குடி நாட்டிற்கும் வீட்டிற்கும் கேடு குடிபோதையில் குடும்ப சந்தோஷத்தை இழக்காதீர்கள் போதையை ஒழிப்போம் பாதையை வளர்ப்போம் போதை அது சாவின் பாதை உள்ளிட்ட பல்வேறு வாசகங்கள் அடங்கிய பதாகைகள் ஏந்தியபடி மாணவர்கள் பொதுமக்கள் ஊர்வலமாக சென்றனர். பின்னர் போதை ஒழிப்பு உறுதிமொழி எடுக்கப்பட்டது. பேரணியில் மகான் ஆஷா உள்ள காதிரி, தர்கா தலைவர் அப்துல் அஜீஸ் மற்றும் மாணவர்கள் பொதுமக்கள் ஏராளமான பேர் கலந்து கொண்டனர்.
திருவள்ளூரில் இருந்து குடியுரிமை நிருபர்
திரு. பாபு