திருநெல்வேலி: திருநெல்வேலி மாநகர காவல்துறை மற்றும் மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகம் சார்பில் போதை ஒழிப்பு மற்றும் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி வண்ணாரப்பேட்டையில் காவல் ஆணையர், சந்தோஷ் ஹாதிமணி இ.கா.ப., தலைமையில் நடைபெற்றது. நிகழ்ச்சியில் காவல் துணை ஆணையர்கள், V.கீதா (மேற்கு) , V.வினோத் சாந்தாராம் (கிழக்கு) S.விஜயகுமார் (தலைமையிடம்) ஆகியோர் கலந்துகொண்டு போதை பழக்கத்தால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து மாணவர்கள் மற்றும் பொதுமக்களுக்கு அறிவுரைகள் வழங்கி உறுதிமொழி ஏற்க செய்ததுடன், விழிப்புணர்வு கையெழுத்து நிகழ்ச்சியையும் நடத்தினர்.
சாலையில் மது அருந்தி விட்டு வாகனம் ஓட்டுவதாலும், வாகனம் ஓட்டும்போது செல்போன் பயன்படுத்துவதாலும் ஏற்படும் விபத்து குறித்து மாணவர்கள் நடித்து காட்டினார்கள். இதில் காவல் துறையினர், பல்கலைக்கழக ஆசிரியர்கள், மாணவர்கள், இளைஞர் செஞ்சிலுவை சங்கம், நெடுஞ்சாலைத்துறை, காவிரி மருத்துவமனை, மக்கள் கல்வி அறக்கட்டளை, அகமகிழ் கலையகம் ஆகியவற்றை சேர்ந்த பலர் கலந்து கொண்டனர்.
திருநெல்வேலியில் இருந்து நமது குடியுரிமை நிருபர்

சண்முகநாதன்