சேலம் : கெங்கவல்லி அருகேயுள்ள நடுவலூர் கிராமத்தில் கஞ்சா, கள்ளச்சாராயம்,
புகையிலை இல்லாத கிராமமாக அறிவித்து கிராம சபா கூட்டத்தில் தீர்மானம். நடுவலூர் கிராமத்தில், போதைப் பொருளுக்கு எதிராக பொதுமக்களிடத்தில், ஏற்படுத்திய விழிப்புணர்வை முன்னிட்டு நடுவலூர் கிராமத்தி்ல், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளான பஞ்சாயத்து தலைவர், பஞ்சாயத்து துணைத் தலைவர், கவுன்சிலர் வார்டு உறுப்பினர்கள், ஊர் முக்கிய பிரமுகர்கள், மகளிர் சுய உதவிக் குழுவைச் சேர்ந்த பெண்கள், ஆசிரியர்கள், மாணவர்கள், தன்னார்வலர்கள் கலந்து கொண்டு நடுவலூர் கிராமத்தை கஞ்சா, கள்ளச்சாராயம் மற்றும் புகையிலை இல்லாத கிராமமாக அறிவிக்க கிராம சபா கூட்டத்தில் ஒரு மனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

இந்நிகழ்ச்சியில் கங்கவல்லி காவல் உதவி ஆய்வாளர் திரு .மணிமாறன், அவர்கள் பேசும்போது நமது இந்திய நாட்டின் தூண்களாக கருதப்படும் குறிப்பாக இன்றைய சமூகத்தில் இளைஞர்கள், பள்ளி, கல்லூரி மாணவர்கள் மட்டுமின்றி, பள்ளிக்குழந்தைகளும், போதைப் பழக்கத்திற்கு அடிமையாகி வருகிறார்கள்.
புதுப்புது பெயர்களில் நமது சமூகத்திற்குள் நுழையும் போதைப்பொருட்கள் இளம் தலை முறையினரின் வாழ்க்கையை கேள்விகுறியாக்கிவிடுகிறது. இதை விற்பனை செய்வதற்கென்றே ரகசிய குழுக்கள் இயங்கிவருகின்றன. போதைப்பொருள் பழக்கமானது உடல் நலத்திற்கும், மனநலத்திற்கும், குடும்ப நலத்திற்கும் மற்றும் சமூக நலத்திற்கும் பெறும் கேடு விளைவிக்கும். இதனால் தனிமனிதன், சமுதாயம் என பல வகைகளிலும் பெரும்பாதிப்புகள் உண்டாகிறது.

அரிது அரிது மானிடராய் பிறத்தல் அரிது அதனினும் அரிது கூன் குருடு செவிடு பேடு இன்றி பிறத்தல் அரிது என்றார் அவ்வையார். ஆனால் இன்றைய காலகட்டத்தில்
“கொடிதினும் கொடிது” தனது போதைப் பழக்க வழக்கத்தால் இளைய சமூகத்தினர் தங்களுக்கு தெரிந்தே தங்களை அழித்துக்கொள்வதாகும். உடல் ஆரோக்கியம்தான் முதல் சொத்து. “சுவர் இருந்தால் தான் சித்திரம் வரைய முடியும்” இளைஞர்கள் நலனும், மனித வளமும் வருங்கால இந்தியாவின் அளப்பரிய ஆற்றலாகும். இயற்கையின் படைப்பில் நம் ஒவ்வொருவரும் உன்னதமானவர்கள். எனவே கஞ்சா, கள்ளச்சாராயம், புகையிலை, மற்றும் இதர போதைப் பழக்கத்திற்கு யாரும் அடிமையாகி விடக்கூடாது. போதைப்பொருள் பயன்படுத்துபவர்களையோ, போதைப் பொருள் வியாபாரம் செய்பவர்களையோ இதுபோன்று இன்னும்பிற சட்டத்தை மீறிய குற்றச்செயல்களில் ஈடுபடுபவர்களையோ கண்டால் அவர்களை பிடித்து காவல்துறையினருக்கு தகவல் கொடுப்பதும், அவர்களை பிடித்து காவல்துறையினரிடத்தில், ஒப்படைப்பதும் பொதுமக்களின் தலையாய கடமையாகும்.
“ஒவ்வொரு காவலரும் சீருடையணிந்த பொதுமக்கள்; ஒவ்வொரு பொதுமக்களும் சீருடை அணியாத காவலர்கள்” காவலர்களும் பொதுமக்களும் இணைந்து செயல்பட்டால்தான் ஆரோக்கியமான சமுதாயத்தை உருவாக்க முடியும் நான் காவல்துறை அதிகாரியாக உங்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த வில்லை உங்களில் ஒருவனாக,
உங்கள் சகோதரனாக விழிப்புணர்வை ஏற்படுத்துகிறேன். நீங்கள் நல்லா இருக்க வேண்டும் உங்கள் குடும்பம் நல்லா இருக்க வேண்டும் என்ற நோக்கிலும், உங்கள் ஊர் சிறந்த ஊராக இருக்க வேண்டும் என்ற அடிப்படையிலும், விழிப்புணர்வு ஏற்படுத்துகிறேன் என விழிப்புணர்வு நிகழ்ச்சியில் கெங்கவல்லி காவல் உதவி ஆய்வாளர் மணிமாறன் விழிப்புணர்வு ஏற்படுத்தினார். இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சியில் நடுவலூர் கிராம நிர்வாக அலுவலர் கனகம், நடுவலூர் அரசு உயர்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் நடராஜன், தனிப்பிரிவு தலைமை காவலர் திரு.சுந்தரேசன், மற்றும் கெங்கவல்லி போலீஸார் பொதுமக்கள் பலரும் கலந்துகொண்டார்கள்.
கோவையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்

A. கோகுல்