திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்டம், பழனி மணி பிரகாஷ் வயது (29),தகப்பனார் பெயர் காளியப்பன் அரண்மனை புதூர் புதுச்சத்திரம் ஆத்தூர் தாலுகா திண்டுக்கல் மாவட்டத்தை சேர்ந்த இவர் அப்பா காளியப்பன் அம்மா முத்துலட்சுமி தங்கை சுஜிதா ஆகியோருடன் வசித்து வருகிறார். இவருக்கு திருமணம் ஆகவில்லை இவர் பி.இ, சிவில் இன்ஜினியரிங் முடித்துவிட்டு வத்தலகுண்டு டோல்கேட்டில் தற்காலிக பணியில் நெடுஞ்சாலை சூப்பர்வைசராக பணிபுரிகிறார் . நாலு மாதங்களாக வேலை செய்து வருகிறார். இரவு வேலை முடிந்த பின்பு 7:00 மணிக்கு இவர் ஊரின் அருகே செல்லும் ரயில்வே தண்டவாளத்தின் அருகே இவருடைய வண்டியை ஓரமாக நிறுத்திவிட்டு ரயில்வே தண்டவாளத்தில் அமர்ந்து மது அருந்தி கொண்டு உள்ளார் இரவு சுமார் 2:30 மணிக்கு திருநெல்வேலியில் இருந்து மேட்டுப்பாளையம் வரை செல்லும் சிறப்பு வண்டியில் அக்கரைப்பட்டி ரயில் நிலையத்திற்கும் ஒட்டன்சத்திரம் ரயில் நிலையத்திற்கும் இடைப்பட்ட இடைவெளியில் சம்பவ இடத்தில் அடிபட்டு இறந்துள்ளார் இவருக்கு குடிப்பழக்கம் இருந்துள்ளது இவருடைய பிரேதத்தை கைப்பற்றி பழனி சிறப்பு சார்பு ஆய்வாளர் குணசேகரன் ஒட்டன்சத்திரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார்.
திண்டுக்கல்லில் இருந்து நமது குடியுரிமை நிருபர்.