திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.V.பாஸ்கரன், அவர்கள் (14.12.2022), திண்டுக்கல் ரயில் நிலையம் அருகே பொதுமக்களிடம் போதை பொருட்கள் பயன்படுத்துவதால் ஏற்படும் விளைவுகள் குறித்தும், தடை செய்யப்பட்ட போதை பொருட்கள் கஞ்சா மற்றும் குட்கா பொருட்கள் விற்பனை செய்தால் காவல்துறையினருக்கு உடனடியாக தகவல் கொடுக்கும் படியும் அறிவுரை கூறி விழிப்புணர்வு ஏற்படுத்தினார்கள். இந்நிகழ்ச்சியில் நகர் உட்கோட்ட காவல் துணைக் கண்காணிப்பாளர் திரு.கோகுலகிருஷ்ணன், அவர்கள் உடன் இருந்தார்கள்.
திண்டுக்கல்லில் இருந்து நமது குடியுரிமை நிருபர்.
திரு.அழகுராஜா