திருநெல்வேலி : திருநெல்வேலி மாவட்டத்தில் கஞ்சா, குட்கா மற்றும் புகையிலை போன்ற போதைப் பொருள்கள் விற்பனை மற்றும் கடத்தல் ஆகியவற்றை முற்றிலும் தடுக்கும் நோக்கில் திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மரு.வி. பிரசண்ண குமார், இ.கா.ப., உத்தரவின் படி, மாவட்ட காவல்துறையினர் தீவிர கண்காணிப்பு மற்றும் ரோந்து நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். அதன்படி, பாப்பாக்குடி பகுதியில் காவல் உதவி ஆய்வாளர், ஆறுமுகம் தலைமையிலான காவல்துறையினர் (10.01.2026) அன்று ரோந்து பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தபோது, சந்தேகத்திற்கிடமான முறையில் நின்று கொண்டிருந்த சொரிமுத்துராஜ் (30) என்பவரை சோதனை செய்தபோது கஞ்சா விற்பனை செய்வதற்காக பதுக்கி வைத்திருந்தது தெரிய வந்தது.
இது குறித்து காவல் ஆய்வாளர், பாரத் லிங்கம் அவர்கள் வழக்கு பதிவு செய்து சொரிமுத்துராஜை கைது செய்து அவரிடம் இருந்து 1 கிலோ 100 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்து உரிய சட்ட நடவடிக்கை மேற்கொண்டு வருகிறார். இது போன்று கஞ்சா, புகையிலை போன்ற போதைப் பொருள் விற்பனை மற்றும் கடத்தல் ஆகியவற்றை முற்றிலும் தடுக்கும் பொருட்டு தமிழ்நாடு அரசு “DrugFreeTN” எனது செயலியை உருவாக்கியுள்ளது. பொதுமக்கள் இந்த App ஐ ப்ளே ஸ்டோரில் இருந்து டவுன்லோட் செய்து கஞ்சா, புகையிலை உள்ளிட்ட போதைப் பொருட்கள் விற்பனை தொடர்பான தகவல்கள் ஏதும் கிடைத்தால், தயங்காமல் தைரியமாக புகார் அளித்து காவல்துறையினருக்கு ஒத்துழைப்பு வழங்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.
புகார் அளிப்பவர்களின் விவரங்கள் முழுமையாக ரகசியமாக பாதுகாக்கப்படும் என மாவட்ட காவல்துறை தெரிவித்துள்ளது. திருநெல்வேலி மாவட்டத்தில், கஞ்சா, குட்கா மற்றும் புகையிலை போன்ற போதை பொருட்களை விற்பனை செய்பவர்கள் மற்றும் வாங்குபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எச்சரித்துள்ளார்.
திருநெல்வேலியில் இருந்து நமது குடியுரிமை நிருபர்

சண்முகநாதன்















