திருநெல்வேலி : திருநெல்வேலி மாநகர மதுவிலக்கு காவல் ஆய்வாளர், இந்திரா தலைமையில் (11.08.2025) அன்று போதைப் பொருள் பயன்படுத்துவதற்கு எதிரான விழிப்புணர்வு நிகழ்ச்சி பாளையங்கோட்டை கதீட்ரல் மேல்நிலைப்பள்ளி, மற்றும் சாப்டர் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்றது. இதில் போதை பழக்கத்தினால் ஏற்படும் தீமைகள், மற்றும் அதை தடுத்து உபயோகப்படுத்தாமல் இருப்பது பற்றியும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. இந்நிகழ்ச்சியில் சுமார் 2000-க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் கலந்து கொண்டு உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர்.
திருநெல்வேலியில் இருந்து நமது குடியுரிமை நிருபர்

சண்முகநாதன்