திருநெல்வேலி : திருநெல்வேலி சரக காவல் துறை துணைத் தலைவர், ப. சரவணன், இ.கா.ப., உத்தரவுப்படி திருநெல்வேலி சரகத்தில் உள்ள நான்கு மாவட்டங்களில் உள்ள பள்ளி கல்லூரி உள்ளிட்ட கல்வி நிலையங்களில் அருகில் உள்ள 476 கடைகளில் நேற்று (12.01.2026) காலை ஒரே நேரத்தில் அதிரடியாக காவல்துறையினரால் போதைப் பொருள்கள் சம்பந்தமாக தீவிர சோதனைகள் நடத்தப்பட்டது. இதில், தடை செய்யப்பட்ட புகையிலை சுமார் 31 கிலோ கைப்பற்றப்பட்டு, நான்கு மாவட்டங்களிலும் 30 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
தடை செய்யப்பட்ட புகையிலைகளை விற்பனை செய்யும்6 கடைகளை சீல் வைக்க சம்பந்தப்பட்ட துறையினர் மூலம் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வரப்படுகிறது. சமுதாயத்தில் இது போன்று தடை செய்யப்பட்ட பொருள்களை விற்பனை செய்யும் நபர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று சரக காவல்துறை துணைத் தலைவர் எச்சரித்துள்ளார். சமுதாயத்தின் பெரிய கேடாக அமையும் புகையிலை பயன்பாட்டினை தடுப்பதற்கு பொதுமக்களும் தங்களுக்கு புகையிலை பயன்பாடு சம்பந்தமாக தகவல் கிடைக்கும் போது தமிழக அரசின் கட்டணமில்லா செயலியான DRUG FREE TAMILNADU பயன்படுத்தி தகவல்களை தெரிவிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது. இந்த செயலியில், தகவல் அளிப்பவர்களின் விவரங்கள் பதிவிடப்படாமலே, தங்களது தகவலை தெரிவிக்க/ பகிர்ந்து கொள்ள வசதிகள் உள்ளது.
திருநெல்வேலியில் இருந்து நமது குடியுரிமை நிருபர்

சண்முகநாதன்
.
















