திருநெல்வேலி : திருநெல்வேலி மாநகர காவல் ஆணையர், ரூபேஷ் குமார் மீனா, இ.கா.ப, உத்தரவின் பேரில், மாநகர காவல் துறையினர் மது மற்றும் போதை பழக்கத்தால் ஏற்படும் விளைவுகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர். இதன் அடிப்படையில் காவல் துணை ஆணையர், (கிழக்கு) S.விஜயகுமார் தலைமையில் திருநெல்வேலி மாவட்ட நேரு யுவ கேந்திராவுடன் இணைந்து தன்னார்வலர்களாக வரும் பள்ளி கல்லூரி மாணவ, மாணவியர்களுக்கு மது மற்றும் போதை பழக்கத்தால் ஏற்படும் விளைவுகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. இந்நிகழ்ச்சியில் சிறந்த முறையில் பணியாற்றிய தன்னார்வ மாணவ மாணவிகளுக்கு பாராட்டு சான்றிதழ்கள் வழங்கப்பட்டது. இதில் மதுவிலக்கு ஆயத்தீர்வை துறை உதவி ஆணையர், மாநகர மதுவிலக்கு அமலாக்க பிரிவு (PEW) காவல் ஆய்வாளர் இந்திரா மற்றும் தன்னார்வலர்கள் 50 நபர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
திருநெல்வேலியில் இருந்து நமது குடியுரிமை நிருபர்
சண்முகநாதன்