திருநெல்வேலி : திருநெல்வேலி மாநகர மதுவிலக்கு ஆய்வாளர், இந்திரா தலைமையில் மாநகர பகுதிகளில் போதைப் பொருளுக்கு எதிரான ஒரு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. அதில் பொதுமக்கள் இடையே போதைப் பொருட்கள் உபயோகப்பதின் தீமையை பற்றியும், குறிப்பாக மாணவர்கள் அதை தவிர்க்கும் விதமாக நடந்து கொள்வதை பற்றியும் அறிவுரை வழங்கினார். மேலும் அவர் பேருந்து நிலையங்கள் ரயில் நிலையங்களில் நோட்டீஸ் அளித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி, போதை இல்லா தமிழகத்தை உருவாக்க அனைவரும் முன்வர வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.
திருநெல்வேலியில் இருந்து நமது குடியுரிமை நிருபர்
சண்முகநாதன்