திருநெல்வேலி: திருநெல்வேலி பாளையங்கோட்டை நேருஜி கலையரங்கில் போதை பொருளுக்கு எதிரான ஒரு கலந்தாய்வு கூட்டம் திருநெல்வேலி சரக காவல்துறை துணை தலைவர்,முனைவர் பா. மூர்த்தி,இ.கா.ப., தலைமையில் நடைபெற்றது. அதில் அவர் பேசியதாவது திருநெல்வேலி சரகத்தை சேர்ந்த நான்கு மாவட்டங்களில் உள்ள கல்லூரி எண்ணிக்கை 256 ஆகும். கல்லூரி மாணவர்கள் போதை பழக்கத்திற்கு அடிமையாகமல் இருக்க வேண்டும். போதை பொருள் நடமாட்டத்தை கட்டுப்படுத்த காவல்துறை மூலம் கடுமையான நடவடிக்கை எடுத்து வருகிறோம். மேலும் கல்லூரிகளில் காவல் துறை மூலம் விழிப்புணர்வு நிகழ்ச்சியும் நடத்தி வருகிறோம்.
மாணவர்கள் போதை பழக்கத்திற்கு அடிமையாகாமல் இருக்க முதல் கட்டமாக அந்தந்த கல்லூரிகளில் ஒரு குழு அமைத்து கண்காணிக்க ஆலோசனை கூறப்பட்டுள்ளது. என கூறிய அவர் போதைப் பொருளுக்கு எதிரான நோட்டீஸ் ஒன்றையும் வெளியிட்டார். பின்பு நிகழ்ச்சியில் அனைவரும் போதை பொருளுக்கு எதிராக உறுதிமொழி எடுத்துக் கொண்டனர். இந் நிகழ்ச்சியில் N. சிலம்பரசன்,(திருநெல்வேலி) இ.கா.ப., ஆல்பர்ட் ஜான், இ.க.ப., (தூத்துக்குடி) V.R ஸ்ரீனிவாசன்(தென்காசி) சுந்தரவாதனம்,இ.கா.ப.,(கன்னியாகுமரி) சேர்ந்த காவல் கண்காணிப்பாளர்கள், அண்ணா பல்கலை முதல்வர், மற்றும் அனைத்து கல்லூரி முதல்வர்களும், பேராசிரியர்களும் கலந்து கொண்டனர்.
திருநெல்வேலியில் இருந்து நமது குடியுரிமை நிருபர்
சண்முகநாதன்