திருநெல்வேலி : திருநெல்வேலி மாநகர மதுவிலக்கு அமலாக்க பிரிவு சார்பில் போதை பொருள் தீமைகள் பற்றி ஒரு விழிப்புணர்வு நிகழ்ச்சி பாளையங்கோட்டை சதக்கத்துல்லா அப்பா கல்லூரியில் (26.09.2024) அன்று நடைபெற்றது. திருநெல்வேலி மாநகர மதுவிலக்கு அமலாக்க பிரிவு உதவி ஆய்வாளர், ஜெயசங்கர் கலந்து கொண்டு மாணவ, மாணவிகளுக்கு போதை பழக்கத்தினால் ஏற்படும் தீமை பற்றி எடுத்துரைத்தார். மேலும் அவர் பேசுகையில் மாணவர்கள் கல்வியை மட்டுமே கற்பதற்கு தயாராக இருக்க வேண்டும் என்றும் போதை பழக்கத்திற்கு அடிமையான மாணவர்களின் எதிர்காலம் கேள்விக்குறியாகி விடும்.
அதனால் தவறியும் கூட இப்பழக்கத்திற்கு அடிமையாகி விடக்கூடாது என உரிமையுடன் கேட்டுக் கொண்டார். மாணவ மாணவிகள் எண்ணங்களிலும் செயல்களிலும் கல்வி மட்டுமே பிரதானமாக இருக்க வேண்டும் இது போன்ற தீய பழக்கங்களுக்கு அடிமையாகி விடாமல் வருங்கால சந்ததியினருக்கும் ஒரு உதாரணமாக இருக்க வேண்டும் என்று அறிவுரை கூறினார். மேலும் இது போன்ற விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை மதுவிலக்கு அமலாக்க பிரிவு தொடர்ந்து மாநகரத்தில் உள்ள அனைத்து கல்லூரி பள்ளிகளிலும் நடத்த இருப்பதாகவும் தெரிவித்துக் கொண்டார். இந்நிகழ்ச்சியில் கல்லூரி முதல்வர், மற்றும் கல்லூரி பேராசிரியர்கள், கல்லூரி பணியாளர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.
திருநெல்வேலியில் இருந்து நமது குடியுரிமை நிருபர்
சண்முகநாதன்