நீலகிரி : நீலகிரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.ஆசிஸ் ராவத்., இ.கா.ப., அவர்களின் அறிவுறுத்தலின்படி உதகை ஊரக உட்கோட்ட காவல் துணை கண்காணிப்பாளர் செல்வி. விஜயலட்சுமி, அவர்கள் தலைமையில் உதகை நஞ்சநாடு கிராமத்தைச் சேர்ந்த பொது மக்களுக்கு போதைப் பொருளினால் ஏற்படும் பாதிப்புகள் பற்றியும், போதைப்பொருட்கள் பயன்பாட்டை ஒழிப்பது பற்றியும் போதைப்பொருள் இல்லாத தமிழகம் என்ற திட்டத்தை குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தியும் பெண்களுக்கான காவலன் SOS செயலி, இணையவளே குற்றங்களுக்கான புகார் எண் -1930, காவல் உதவி எண் -100 மற்றும் போதைப் பொருள் இல்லா நஞ்சநாடு கிராமம் என விழிப்புணர்வு ஏற்படுத்தி உறுதிமொழி ஏற்கப்பட்டது.