திருவண்ணாமலை : திருவண்ணாமலை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மரு.கி.கார்த்திகேயன், இ.கா.ப., அவர்களுக்கு கிடைத்த ரகசிய தகவலின்படி, ஆரணி உட்கோட்ட துணைக் காவல் கண்காணிப்பாளர் திரு.ரவிச்சந்திரன் அவர்கள் தலைமையில் ஆரணி கிராமிய காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் ஹான்ஸ் மற்றும் குட்கா போன்ற போதைப் பொருட்களை விற்பனைக்காக வைத்திருந்த 2 நபர்கள் கைது. மேலும் அவரிடம் இருந்து ரூபாய் 6,000/- மதிப்புள்ள குட்கா பொருட்கள் கைப்பற்றப்பட்டது.