திருநெல்வேலி : திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் N.சிலம்பரசன்.இ.கா.ப., அறிவுரையின் படி மாவட்ட காவல்துறையினர் பள்ளி மற்றும் கல்லூரி மாணவ, மாணவியர்களுக்கும், பொது மக்களுக்கும் தொடர்ந்து பல்வேறு வகையான விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகின்றனர். இதன் தொடர்ச்சியாக சீதபற்பநல்லூர், AKY பாலிடெக்னிக் கல்லூரியில் போதை பொருள் பழக்கத்திற்கு எதிரான விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.
இந்நிகழ்ச்சிக்கு கல்லூரி தாளாளர், அயூப்கான் தலைமையில், சிறப்பு அழைப்பாளராக சீதபற்பநல்லூர் காவல் ஆய்வாளர், சுப்புலட்சுமி, காவல் உதவி ஆய்வாளர் நிசார் அகமது, கலந்துகொண்டு போதை பொருள் பயன்பாட்டால் எவ்வாறு மனித குலமும் சமூகமும் சீரழிகிறது என்பதை பொறுமையுடன் மாணவர்களுக்கு எடுத்துரைத்து மாணவ, மாணவிகள் இப்பழக்கத்திற்கு அடிமையாகி விடக்கூடாது என்பதில் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டனர்.
திருநெல்வேலியில் இருந்து நமது குடியுரிமை நிருபர்

சண்முகநாதன்