திருநெல்வேலி : திருநெல்வேலி மாவட்டத்தில் சட்ட விரோத போதைப்பொருள் நடமாட்டத்துக்கு எதிராக தீவிர நடவடிக்கைகள் மாவட்ட காவல்துறையினரால் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. புகையிலைப் பொருள்கள், கஞ்சா குட்கா போன்ற பொருள்களை விற்பனை செய்பவர்கள் மீது தனிக் கவனம் செலுத்தி தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகின்றனர். நிகழாண்டில் இதுவரை 140 கஞ்சா வழக்குகளும், 182 புகையிலைப் பொருள் தொடர்பான வழக்குகளும் பதிவு செய்யப்பட்டுள்ளன. 225.4 கிலோ கஞ்சா கைப்பற்றப்பட்டுள்ளது. மேலும், கஞ்சா வழக்குகளில் ஈடுபட்டவர்களின் 3 வங்கிக் கணக்குகள் முடக்கப்பட்டுள்ளன.
கஞ்சா வழக்கில் கைது செய்யப்பட்டவர்களில் 11 பேர் மீது குண்டா் தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மேலும் 3,096 கிலோ புகையிலைப் பொருள்கள் கைப்பற்றப்பட்டு, இது தொடர்பாக 203 போ் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இது போன்ற போதைப் பொருள்களை விற்பனை செய்பவர்கள் மீதும் பாரபட்சமின்றி நடவடிக்கைகள் தொடர்ந்து மேற்கொள்ளப்படும் என காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்படுகிறது.
திருநெல்வேலியில் இருந்து நமது குடியுரிமை நிருபர்

சண்முகநாதன்