தூத்துக்குடி : ஆத்தூர் காவல் நிலைய ஆய்வாளர் திரு. மாரியப்பன் தலைமையிலான போலீசார் (17.12.2024) வடக்கு ஆத்தூர், தெற்கு ஆத்தூர் மற்றும் துறையூர் பகுதிகளில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளிகளைச் சேர்ந்த மாணவர் காவல் படையினர் மூலம் போதைப்பொருள் மற்றும் சாலை பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு பேரணி நிகழ்ச்சியை நடத்தினர்.
தலைமை ஆசிரியர்கள், ஊர் முக்கியஸ்தர்கள், மாணவ மாணவிகள் என சுமார் 100 பேர் கலந்து கொண்ட இந்த விழிப்புணர்வு பேரணி போதைப் பொருள் பயன்படுத்துவதால் ஏற்படும் விளைவுகள் குறித்தும் , சாலை விதிமுறைகள் குறித்தும் பதாகைகள் ஏந்தி ஆத்தூர் முக்கிய வீதிகள் வழியாக சென்று நிறைவுற்றது.