தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. நை. சிலம்பரசன் அவர்கள் உத்தரவின்படி, (20.01.2026) குளத்தூர் காவல் நிலைய காவல்துறையினர், குளத்தூர் T.M.M கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கான விழிப்புணர்வு நிகழ்ச்சியை நடத்தினர். இந்த நிகழ்ச்சியில், போதைப்பொருள் பயன்பாட்டின் தீமைகள், அதனால் ஏற்படும் உடல், மன மற்றும் சமூக பாதிப்புகள் குறித்து எடுத்துரைக்கப்பட்டது. மேலும், போக்சோ சட்டங்கள், குழந்தைகள் மற்றும் மாணவர்களின் பாதுகாப்பு, சட்ட மீறல்களுக்கு விதிக்கப்படும் தண்டனைகள் குறித்து விரிவாக விளக்கி விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. இதில் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் ஆர்வமுடன் கலந்து கொண்டு, சமூக பொறுப்புணர்வுடன் செயல்பட வேண்டிய அவசியத்தை உணர்ந்தனர்.
















